Posted in Uncategorized

படித்ததில் நெகிழ்ந்தவை…..

Image

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
இறுதியில் நீண்ட நேர முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சா
ய்ந்து கொண்டது.
சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது… :((

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..

Posted in Uncategorized

தெரிந்து கொள்வோம் ……..

உங்களுக்கு தெரியுமா?????

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

Posted in Uncategorized

World’s Famous Company Abbreviations

DHL – Dalsey, Larry Hillblom, Robert Lynn
IBM – International Business Machines Corporation
TLC – The Learning Channel
FIAT – Fabbrica Italiana Automobili Torino
HMV – His Master’s Voice
TCS – Tata Consultancy Services
SAP – System Analysis and Program
AMUL – Anand Milk Union Limited
IKEA – Ingvar Kamprad Elmtaryd Agunnaryd
HTC – High Tech Computer Corporation
JBL – James Bullough Lansing
3M – Minnesota Mining and Manufacturing Company
H&M – Hennes & Mauritz
AT&T – American Multinational and TeleCommunications Corporation
ING – International Netherlands Group
BMW – Bayerische Motoren Werke
KFC – Kentucky Fried Chicken
BPL – British Physical Laboratories
BASF – Baden Aniline and Soda Factory
BEML – Bharat Earth Movers Limited
BHEL – Bharat Heavy Electricals Limited
ICICI – Industrial Credits and Invesment Corporation of India Bank
HDFC – Housing Development Finance Corporation
ESPN – Entertainment and Sports Programming Network
HCL – Hindustan Computer Limited
HSBC – Hongkong and Shanghai Banking Corporation
L&T – Larsen & Toubro Limited
LEGO – Leg Godt(Play Well)
MRF – Madras Rubber Factory
CEAT – Cavi Elettricie Affini Torino
HMT – Hindustan Machine Tools
WIPRO – Western India Products Limited
ITC – Indian Tobacco Company
CAT – Caterpillar
INTEL – Integrated Electronics

Posted in Likes

அனுபவ சித்தரின் அனுபவம்!

 

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி‘
அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்

– கவிஞர் கண்ணதாசன்